நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் கடற்கரையில் மூடப்பட்டுள்ளது.
நிவர் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தீவிர புயலாக மாறியுள்ளது. இது நாளை மாலை காரைக்கால்-மகாபலிபுரம் இடையே புதுகை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் தமிழக அரசு மற்றும் புதுவை அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது புதுச்சேரியிலிருந்து 370 கிலோ மீட்டரில் நிவர் புயல் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி கடற்கரை தற்போது மூடப்பட்டுள்ளது. போலீசார் கடற்கரை சுற்றுப்புறத்திலிருந்து மக்களை வெளியேற்றி வருகின்றனர்.