நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
நிவர் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுக்கோட்டை நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 7 மாவட்டங்களில் நேற்று பிற்பகல் ஒரு மணி முதல் மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்தை நிறுத்தபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தஞ்சாவூர், மயிலாடுதுறை மார்க்கமாக செல்லும் 6 விரைவு ரயில்கள் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து தஞ்சை செல்லும் உடவன் விரைவு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து திருச்சி செல்லவிற்கும் ரயிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.