நெல்லையில் சமூக சேவகர் முக கவசம் விற்ற 14,000 ரூபாயை கொரோனாவிற்கான நிவாரண நிதியாக மாவட்ட கலெக்டரிடம் வழங்கியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சமூக சேவகரான பாபுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாபுராஜ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரினுடைய நிவாரண நிதிக்கு ரூபாய் வழங்கும் எண்ணத்தோடு, வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி முக கவசத்தையும் விற்றுள்ளார்.
அதன்மூலம் 14,000 ரூபாயை நிதியாக திரட்டினார். அந்த நிதியை மாவட்ட கலெக்டரான விஷ்ணுவிடம் முதலமைச்சரினுடைய நிவாரண நிதிக்கு வழங்கினார்.