Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பால் வாங்க கூட காசு இல்ல…. கடன் கொடுத்தவங்க கிட்ட பதில் சொல்ல முடியல… நிவாரணம் கேட்டு கோரிக்கை விடுத்த நரிக்குறவர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நரிக்குறவர்கள் நிவாரணம் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம், அறிவொளி நகர் ஆகிய பகுதிகளில் நரிக்குறவர் மக்கள் சுமார் 58 வீடுகளில் 100 க்கும்  மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பாசி, ஊசி, மணி தயாரித்து பிழைப்பிற்காக விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தனிநபர் வங்கியில் வட்டிக்கு கடன் வாங்கி விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் வாங்கி திருவிழாக்களில் விற்பனை செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

இதனையடுத்து கொரோனா தொற்று காலத்தில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடன் வாங்கி வாங்கிய அனைத்தும் முழுமையாக வீடுகளில் விற்க முடியாமல் தேக்கி வைத்திருப்பதாலும், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், கடன் கொடுத்தவர்களுக்கு பதில் சொல்ல முடியாமலும் உணவுக்கே வழியின்றி, குழந்தைகளுக்கு பால் வாங்க கூட சிரமமாக உள்ளது. இதனால் எங்களின் நலன் கருதி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |