சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சம்பன்குளத்தில் விவசாயியான சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 1 1/2 ஏக்கர் நிலத்தில் வாழைகள் பயிர் செய்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வீசிய சூறைக்காற்றில் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து விழுந்ததால் சாமி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.