Categories
மாநில செய்திகள்

நிவாரண நிதி வழங்க புதிய இணையதளம் – அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை தாரளமாக அளிக்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வரின் பொது நிவாரண நிதி வழங்க புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி செயல்பாட்டிற்கு வந்துள்ள cmprf.tn.gov.in என்ற புதிய இணையதளத்தின் மூலமாக நிவாரண நிதி வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |