Categories
தேசிய செய்திகள்

நிவாரண பொருட்களை எடுத்து செல்ல… 24 மணி நேரமும் தயாராக இருப்போம்… மோடியிடம் விமானப்படை தலைமை தளபதி உறுதி…!!

வெளிநாடுகளிலிருந்து வரும் மருத்துவ உபகணங்களை இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு எடுத்து செல்ல விமான படையினர் 24 மணிநேரமும் தயாராக இருப்பார்கள் என விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகள் பலரும் இந்தியாவிற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அனுப்பிவருகின்றனர். இந்நிலையில் கொரோனா நிவாரணம் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டரை மற்ற மாநிலங்களுக்கு எடுத்து செல்வதற்கு இந்திய விமானப் படையினர் உதவ முன்வந்துள்ளனர். இதனையடுத்து விமானப் படைத் தலைமை தளபதியான ஆர்.கே.எஸ். பதவுரியா அனைத்து சரக்குகளையும் மாநிலங்களுக்கு ஏற்றி செல்லக்கூடிய வகையில் விமானங்கள் தயாராக இருக்கும் என நேற்று பிரதமர் மோடியுடன் நடைபெற்ற கலந்தாய்வில் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் தேவையான விமானங்களும், விமான படை ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் எந்த நேரமும் தயாரான நிலையில் இருப்பார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் விமானப்படையின் மருத்துவமனைகளில் முடிந்த அளவில் பொதுமக்களுக்கும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். விமானப்படையினரின் இந்த உதவியால் அனைத்து மாநிலங்களிலும் அத்தியாவசிய பொருட்களை வேகமாக எடுத்து செல்ல முடியும் என பிரதர் மோடி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |