Categories
மாநில செய்திகள்

நிவார் புயல் வரும் 25-ம் தேதி கரையைக் கடக்கும் …!!

நிவார் புயல் காரணமாக தமிழகத்தில் நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்ககளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை பெற்று பின்னர் புயல் சின்னமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சின்னம் நாளை மறுநாள் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவார் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தமிழகம் புதுச்சேரி கரையை நெருங்குவதால் நாகை , தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடியக்கரை முதல் பழவேற்காடு வரையிலும் தனுஷ்கோடி முதல் குளச்சல் வரையிலும் நேற்று இரவு முதல் இரண்டு நாட்களுக்கு கடல் சீற்றம் காணப்படும் என்றும் இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 25-ஆம் தேதி நிவார் புயல் கரையை கடக்கும் என்பதால் நாகை, தஞ்சை திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |