Categories
சினிமா

நிவின் பாலி நடிக்கும் “தாரம்”…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…. வெளியான தகவல்….!!!!

மலையாள நடிகர் நிவின் பாலி “நேரம்” படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து அவர் நடித்த “பிரேமம்” மலையாள படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன்பின் நிவின் பாலி நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை இயக்குனர் ராம் இயக்கிவருகிறார். இப்படத்தில் நடிகை அஞ்சலி, நடிகர் சூரி உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர்ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இதற்கிடையில் நிவின் பாலி நடித்து இருக்கும் “சாட்டர்டே நைட்” படம் இந்த வாரம் திரைக்குவர இருக்கிறது. இப்படத்திற்காக நிவின் பாலி தன் உடல் எடையை அதிகரித்து இருந்தார். இந்நிலையில் நிவின் பாலி நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜைபோடப்பட்டு, படப்பிடிப்பானது துவங்கப்பட்டு உள்ளது. இத்திரைப்படத்திற்கு “தாரம்” என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்திற்காக நிவின் பாலி மீண்டுமாக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

 

Categories

Tech |