சென்னை மாநகராட்சி வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் கலந்து கொண்ட காங்கிரஸ் நிர்வாகி செய்தியாளர்களிடம் கூறியதாவது, உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேர்தல் நடைபெறும் முதல் நாள் வரையில் நீக்கல், அடித்தல், திருத்தம் செய்யலாம் என்று மாநகராட்சி ஆணையர் கூறினார்.
அந்த நீக்கலை நீங்கள் முறைப்படுத்தி நீங்கள் சரியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். அடுத்து ஒரு குடும்பத்தில் இருக்கின்ற வாக்காளர் அனைவரும் அந்த பாகத்தில் வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பதற்கு நீங்கள் திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறினோம், அதையும் கவனிப்பதாக ஆணையாளர் அவர்கள் உறுதி அளித்தார்கள். ஆகவே தமிழக காங்கிரஸ் கமிட்டி சென்னை மாநகராட்சி சிறப்பான முறையில் வாக்காளர் பட்டியல் வெளியிட்டதை பாராட்டுகின்றது.