செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நூறு ஆண்டுகள் கடந்த ஒரு பொருள் இருந்தால், அந்தப் பொருளுக்கு விலை மதிப்பு இல்லை. ஆகவே புராதானத்தை காப்பாற்றப்பட வேண்டுமென்றால் இதுபோன்ற ஏ.எஸ்.ஐ இருக்கின்ற அந்த திருக்கோவில்களில் முறையான அனுமதி பெற்று அந்த கோவிலினுடைய புனரமைப்பு பணிகளுக்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.
அந்த வகையிலே அதற்குண்டான பணிகளுக்கு என்று ஒரு குழுவை நியமித்து தொடர் வாடிக்கையாக… திருப்பணிகளை மேற்கொள்வதற்கான அனைத்து பணிகளும் நடைபெறுகின்றது. எங்கேயாவது அந்த பணிகள் தடைப்பட்டு இருந்தால், நீங்கள் எங்களுடைய கவனத்திற்கு கொண்டுவந்தால் அதை விரைந்து செயல் படுத்துவதற்காக முயற்சிகளை மேற்கொள்வோம்.
சுமார் 1,640 கோடி ரூபாய் அளவிற்கு நிலங்கள் மீட்கப்பட்டு இருக்கிறது. 430 நபர்களிடமிருந்து, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலங்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலங்கள் மீட்கின்ற வேட்டை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். இறை சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில் யார் யாரெல்லாம் இப்படி திருக்கோவில் நிலம் என்று தெரிந்து ஆக்கிரமித்து இருக்கிறார்களோ….
அவர்களாக முன்வந்து இது இறைவனுக்கு சேரவேண்டிய இடம் என்பதை மனதிலே வைத்து அதை திருக்கோவில் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உங்கள் வாயிலாக இந்த நல்ல நாளில் வேண்டுகோளாக வைக்கிறேன். பிறந்திருக்கின்ற இந்த புதிய வருடத்தில் 1,640 கோடியாக இருக்கின்ற இந்த நிலம் மீட்பினுடைய மதிப்பு வருகின்ற இந்த ஆண்டு முழுமை பெறுகின்ற போது பல்லாயிரம் கோடிகள் என்ற நிலையை உருவாக்குவதற்கான பணியினை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.