Categories
Tech

நீங்களும் அவதாரா மாற வாட்ஸ்அப் அப்டேட்…. எப்படி பயன்படுத்துவது?…. இதோ முழு விவரம்…..!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் திறந்து வரும் புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் வாட்ஸ் அப் குரூப்பில் இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் உள்ளது போல வாட்ஸ் அப்பிலும் எமோஜிகளை பயனர்கள் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. தற்போது பயனர்கள் தாங்களாகவே அவதார் உருவங்களை உருவாக்கிய அதனை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் வாட்ஸ் அப்பில் புதிய அம்சமாக வந்துள்ள அவதார் ஸ்டிக்கர்ஸ் பயனாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வாட்ஸ் அப் அப்டேட் செய்து கொண்டு setting உள்ளே செல்ல வேண்டும். அதன் பிறகு அவதார் கிளிக் செய்து உங்கள் நிறத்தை தேர்வு செய்யவும். பிறகு தலைமுடி, உடை மற்றும் ஸ்டைல் போன்ற அம்சங்களை பயன்படுத்தி உங்கள் அவதாரை உருவாக்குங்கள். இறுதியாக Done அழுத்தினால் நீங்கள் உருவாக்கிய அவதார் ரெடி.

Categories

Tech |