Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீங்களும் பயன்பெறலாம்…. இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்….!!

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் இன்று   நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் வைத்து மாவட்ட மகளிர் திட்டம், தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம், டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மற்றும் சென்னை புளூ ஓசன் பர்சனல் அன் ஆலாய்டு சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை   சார்பில் பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.  இதனையடுத்து   கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் கல்வி சான்றிதழ் (அசல் மற்றும் நகல்) ஆதார் அட்டை, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் வந்து பங்கு பெறலாம் என  அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Categories

Tech |