மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. மேலும் தற்போது குரூப்-4 தேர்வுக்கும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
எனவே இந்த வகுப்புகளில் நமது மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் குடும்ப அட்டை நகல், தேர்வுக்கு விண்ணப்பித்த நகல் போன்ற சான்றிதழ்களுடன் நேரில் சென்று சேரலாம் எனவும், மேலும் வகுப்புகள் இணையதளம் வாயிலாகவும் நடைபெறுகிறது. இதனையடுத்து இணைய வழியில் படிப்பதற்கு தேவையான பாடப்புத்தகங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.