இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பொது மக்களுக்கு நிறைய காப்பீட்டு திட்டங்களையும், அதிக வருமானம் தரும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்களின் வயது தேவை போன்ற பிரிவுகளுக்கு ஏற்ப பல்வேறு திட்டங்கள் எல்ஐசியில் உள்ளது. குறுகிய காலத்தில் பணக்காரர் ஆக நினைப்பவர்களுக்கும் எல்ஐசி பாலிசி உதவும். அப்படிப்பட்ட ஒரு திட்டத்தின் எல்ஐசி ஜீவன் ஷிரோமினி பாலிசி திட்டம் ஆகும். இது ஒரு ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச உத்திரவாத தொகையாக ரூ.1 கோடி கிடைக்கும். பாலித்தாரர் இத்திட்டத்தின் கீழ் ரிட்டன் பெற நினைக்கும் காலத்துக்கு முன் 4 ஆண்டுகளுக்கு முதலீடு செய்திருக்கவேண்டும்.
அதனை தொடர்ந்து இந்த பாலிசி 14 ஆண்டுகள், 16 ஆண்டுகள், 18 ஆண்டுகள், 20 ஆண்டுகள் ஆகிய 4 பிரிவுகளில் கீழ் முதிர்வடைகிறது. இந்த திட்டத்தின் கீழ் அதிக லாபம் பெறுவதற்கு பாலிசிதாரர் மாதத்துக்கு ரூ.94,000 பிரிமியம் செலுத்த வேண்டும். இந்த பாலிசியை வாங்குவதற்கு பாலிஸ்டர் குறைந்தது 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இதனையடுத்து 14 ஆண்டு பாலிசி காலத்துக்கு அதிகபட்ச வயது வரம்பு 55 ஆண்டுகள். அதனைப் போல 14 ஆண்டுகள் பாலிசிக்கு 51வயது, 18 ஆண்டுகள் பாலிசி காலத்துக்கு 48 வயது, 20 ஆண்டு பாலிசி காலத்துக்கு 45 வயதாக அதிகபட்ச வயது வரம்பு இருக்க வேண்டும். மேலும் பாலிசிக்கான வயது மற்றும் பாலிசி காலத்தை பொறுத்து குறைந்தபட்ச உத்திரவாத தொகை மற்றும் பலன்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.