ஜெர்மனி காவல்துறையினர் எல்லாவற்றிக்கும் எங்களை அழைக்க வேண்டாம் என்று பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஜெர்மனியின் போலீஸ் யூனியன் தலைவர் Jorg Radek என்பவர் மக்களுக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் சட்டத்தை மீறி பொதுமக்கள் யாராவது ஒன்றாகக் கூடினால் நீங்களே விதிமுறைகளை பின்பற்றுங்கள் என்று கூறிவிடுங்கள்.உடனேயே காவல்துறையினரை அழைக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் ஒவ்வொருவரும் இதுபோன்ற காலகட்டங்களில் சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பது நல்லது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், பண்டிகைகளின் போதும் எங்கள் கடமைகளை நாங்கள் சரியாக செய்து கொண்டுதான் இருக்கிறோம். எனினும் அதற்காக ஒவ்வொரு வீடாக சென்று வீட்டிற்குள் மேஜையின் முன்பு எவ்வளவு பேர் அமர்ந்திருக்கிறார்கள்? சமூக இடைவெளி கடைப்பிடிக்கிறார்களா ? என்பதையெல்லாம் கவனிக்க முடியாது.
அப்படி செய்தால் அது அவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் விதிமுறைகள் மீறப்படும் வகையில் யாரவது நடந்து கொண்டார்கள் என்று எங்காவது புகார் தெரிவிக்கப்பட்டால் உடனடியாக விசாரிப்போம் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.