நாங்கள் சொல்வது அறிவியல் பூர்வமாக இருக்கும் என பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, நாம எப்பவுமே மதத்தை வைத்து அரசியல் செய்யக்கூடிய கட்சி கிடையாது. அதாவது கொரோனா ஆரம்பிக்கப்பட்ட போது…. இந்த ஆட்சி வந்தபோது, இரண்டாம் அலை கொரோனா இருந்த போது…. அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். நம்ம கட்சியிலிருந்து போயிருந்தார்கள். அனைத்து கட்சி கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது.
எல்லாமே டேட்டாவை வைத்து முடிவெடுத்தோம். இந்த மாதிரி கொரோனா நோய் இருக்கு, இந்த மாரி கட்டுப்பாடுகள் வேண்டும் என்றார்கள் எல்லா கட்சிகளும் ஒத்துக் கொண்டார்கள். ஆனால் இப்போது சினிமா தியேட்டர் திறக்கிறார்கள், சினிமா தியேட்டரில் எல்லா படத்தையும் அனுமதிக்கிறார்கள் ஏன் ? ஒரு பக்கம் உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் படத்தை ப்ரொமோட் செய்கிறார். இந்த படத்தை பாருங்கள், அந்த படத்தை பாருங்கள், இந்த படம் ரிலீஸ் ஆகுது என…
இதை செய்யக்கூடிய அரசு, எதற்காக இன்னொரு பக்கம் கோவிலை மூடவேண்டும் ? ஒரு லாஜிக் தான பின்பற்ற வேண்டும். நீங்கள் கோவிலுக்கு போவதால் கொரோனா வரும் என்றால் சினிமாக்கு போன கொரோனா வரதா ? பள்ளிக்கு போன கொரோனா வரதா ? வியாழக்கிழமை, திங்கட்கிழமை எவ்வளவு கூட்டங்கள் ? அந்தக் கூட்டத்தில்தான் உண்மையாகக் கொரோனா வரும்.
என்னென்றால் 3நாட்கள் வருகின்ற கூட்டத்தை திங்கட்கிழமை அனுமதிக்கிறீர்கள். அப்படியே கோவில்களில் பார்த்தீர்கள் என்றால்… ஜோர் ஜோராக இருக்கிறது. நாங்கள் சொல்வது அறிவியல் பூர்வமாக இருக்கும். நீங்கள் வியாழக் கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை திறந்தால் மக்கள் எல்லா நாளும் போவாங்க. உங்களுக்கு வர கூட்டம் குறையும் என தெரிவித்தார்.