Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்கள்தான் உயர்வானவர்கள்…. துப்புரவு பணியாளர்களை புகழ்ந்து தள்ளிய பிக் பாஸ் பிரபலம்…. வைரலாகும் புகைப்படம்…!!

துப்புரவு பணியாளர்களுடன் சேர்த்து ஆரி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4  நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வெற்றி பெற்றவர் நடிகர் ஆரி. இவர் இந்நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து தற்போது ஆரி பல படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதனுடன் சேர்த்து ஒரு பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அதில்,”நான் விரும்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் இது. குப்பை போடுபவர்களை விட, அதை சுத்தம் செய்பவர்களே உயர்வானவர்கள். இதை கொரானா காலத்தில் உலகிற்கு உணர்த்திய உங்களது சேவை மகத்தானது” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

https://www.instagram.com/p/CMe0DC-BTqb/

Categories

Tech |