வளர்ந்துவரும் டிஜிட்டல் யுகத்தில் சற்று கவனக் குறைவாக இருந்தால் இன்டர்நெட் மோசடி மற்றும் ஹேக்கிங் குறித்த சம்பவங்களால் நாம் பாதிப்பை சந்திக்கநேரிடும். இதுகுறித்து பல புகார்கள் பதிவாகி இருப்பதாகவும், Remote attacker-களை கணினியில் arbitrary codeஐ இயக்குவதற்கு அனுமதிக்கும் என CRET IN தெரிவித்துள்ளது. அத்துடன் 81.0.4044.138-1க்கு முந்தைய அனைத்து Google chrome பாதிப்புகளையும் பாதிக்கிறது. கூகுள்குரோம் யூசர்கள் தங்களது கூகுள் குரோம்மை அப்டேட் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் Windows, Mac மற்றும் Linux பதிப்புகளிலுள்ள Chrome பயனாளர்கள் தங்களது பிரவுசரை புது Chrome பதிப்பு Mac மற்றும் Linux க்கு 104.0.5112.101 மற்றும் Windows க்கு 104.0.5112.102/101 எனவும் தெரிவிக்கப்பட்டது. முன்பே நீங்கள் அப்டேட் செய்திருந்தால் பரவாயில்லை. இல்லையெனில் தேவையற்ற ஹேக்கர் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். இப்போது கூகுள் குரோமில் 11 பாதுகாப்பு குறைபாடு அம்சங்கள் காணப்படுவதால், மீண்டும் ஒரு முறை அப்பேட் செய்யும்படி தங்களது யூசர்களை கேட்டுக் கொண்டுள்ளது. இன்னும் நீங்கள் உங்களது கூகுள்குரோமை அப்பேட் செய்யவில்லை எனில் இப்பதிவில் அதை பற்றி காண்போம்.
உங்கள் கம்யூட்டரில் கூகுள் குரோம் அப்பேட் செய்வது எவ்வாறு?..
நீங்கள் உங்களது கம்யூட்டரில் கூகுள் குரோமை அப்டேட் செய்து இருந்தாலும், இல்லை செய்யாமல் இருந்தாலும் பின் வரும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றவும்.
# முதலாவதாக யூசர்கள் தங்களது கூகுள் குரோம் பிரவுசர் (google chrome browser) செல்லவும்.
# அதன்பின் உங்களது வலதுப் புறத்திலுள்ள 3 புள்ளிகளைக் கிளிக் செய்த பிறகு Help என்ற ஆப்ஷனை கிளிக்செய்யவும்.
# அதனை தொடர்ந்து about google chrome சென்று புது அப்டேட் தேடல் ( new update search) என்பதை கிளிக் செய்தால் அப்டேட் முடிந்து உங்களது திரைக்கு relaunch என்ற ஆப்ஷன் தெரியவரும்.
# இந்த ஆப்ஷனைக் கிளிக்செய்து இன்ஸ்டால் செய்தால் போதும் சில நிமிடங்களில் Version 105.0.5195.102 (Official Build) (64-bit) என்ற புது அப்டேட் வெர்சன் இன்ஸ்டால் ஆகிவிடும்.
# அதன்பின் வழக்கம்போல் இனி நீங்கள் கூகுள்குரோம் பிரவுசரை ஓபன் செய்து எவ்வித அச்சமின்றி உபயோகிக்கலாம்.
# ஆகவே இதுவரையிலும் google chrome பிரவுசரை அப்டேட் செய்யாதவர்கள் உடனே அப்டேட் செய்வதற்கு மறந்து விடாதீர்கள்.