நாமக்கல் பரமத்தி-வேலூரிலுள்ள தனியார் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டமானது நடந்தது. இவற்றில் பங்கேற்பதற்காக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கரூரிலிருந்து காரில் வந்தார். அப்போது அவருக்கு மாவட்ட தலைவர் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அண்ணாமலை பேசியதாவது, மாநிலத்தில் மொத்த சிஸ்டமும் கெட்டுவிட்டது என்பது உண்மைதான். அதனை உடனடியாக சரிசெய்ய முடியாது என விமர்சித்துள்ளார். மேலும் அரசியல் என்பது ஒரு ஆரோக்கியமான களம் ஆகும். அதை ஆரோக்கியமாக வைத்திருக்க இளைஞர்களால் மட்டுமே முடியும். எனவே இளைஞர்கள் அரசியலுக்கு அதிகம் வரவேண்டும். அரசியலை யாரும் ஒதுக்கவேண்டாம் என்று பேசினார்.