கண்ணா லட்டு தின்ன ஆசையா எனும் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமான ஒரு மருத்துவர்தான் சேது ராமன். இந்த படத்திற்கு பின் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 ஆகிய படங்களில் கதாநாயகனாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இவர் சருமநிபுணர் எனப்படும் Dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்து இருக்கிறார்.
மேலும் சேது ராமன் சொந்தமாக தோல் நோய் மருத்துவமனை ஒன்றை 2016ம் வருடம் திறந்தார். இவர் சென்ற வருடம் மார்ச் மாதம் மாரடைப்பால் இறந்தார். இதற்கிடையில் சேதுராமன் இறப்பின்போது 2-வதாக கர்ப்பமாக இருந்த அவரது மனைவி உமா அந்த நேரத்தில் 5 மாதமாக இருந்தார். அதன்பின் சேது ராமன் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தைகள் மற்றும் மருத்துவமனையை அவரது மனைவி உமா தான் பார்த்துக்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் சேது ராமன் குறித்து உமா உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதாவது, இன்று உணர்ச்சிகள் அதிகமாக இருந்தது. நீங்கள் எனது அருகில் இருப்பதை என் மூளை ஒரு நிமிடம் உணர்ந்தது. என்னுள் உன்னை மட்டுமே உணர முடியும் என உணர ஆரம்பித்தேன். நீங்கள் இல்லாத என்னுடைய வாழ்க்கையை நான் இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறேன் என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram