Categories
லைப் ஸ்டைல்

நீங்கள் அறியாத அத்திப்பழம் ரகசியம்… தினமும் 2 சாப்பிடுங்க…!!!

உடலிலுள்ள பல பிரச்சினைகளுக்கு அருமருந்தாக அமையும் அத்திப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது.அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். சிலர் அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் அத்திப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

இதனை தினமும் இரண்டு சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். ஒல்லியாக இருப்பவர்கள் தினமும் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகமாகும். உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் சரியாகும். மலட்டுத்தன்மை நீங்க அத்திப்பழம் ஒரு சிறந்த மருந்து. மேலும் ஆஸ்துமா, வலிப்பு, சோர்வு, அசதி, இளைப்பு, சிறுநீரக கற்கள் போன்றவற்றை நீக்க அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தரும். குறிப்பாக மூட்டுவலிகளை குணப்படுத்தும். அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும். இவ்வாறு உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு அத்திப்பழம் அருமருந்தாக அமைகிறது.

Categories

Tech |