ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது நுகர்வோர் நேரடியாக பார்க்காமல், ஆன்லைனில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தே வாங்குகின்றனர். தற்போது ஆன்லைனில் தங்க நகைகளை வாங்கும் பழக்கமும் அதிகரித்துவிட்டது. நீங்களும் ஆன்லைனில் தங்கம் வாங்கினால் இந்த உதவிக்குறிப்புகள் உங்களுக்கு நிச்சயமாக பயன்படும்.
சான்றளிக்கப்பட்ட அல்லது ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே வாங்கவும். ஆன்லைனில் தங்கத்தை வாங்கும் போது ஹால்மார்க் சான்றிதழுடன் வாங்க வேண்டும். பிஐஎஸ் (Bureau of Indian Standards) ஹால்மார்க் தரச் சான்றிதழ் பெற்ற நகைக்கடைக்காரரிடமிருந்து வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் ஆபரணம் / நாணயம் / பார்களில் BIS குறியீடு இருக்கும். BIS இணையதளத்தில் BIS சான்றளிக்கப்பட்ட நகைகளை விற்கும் நகைக்கடை விற்பனையாளர்களின் பட்டியல் இருக்கு. அதை பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஆன்லைனில் நீங்கள் வாங்கிய நகையை திருப்பிக் கொடுப்பது மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை கொள்கை வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். COVID-19 நெருக்கடியால் நுகர்வோர் நடத்தையில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது சில்லறை விற்பனையாளர்களுக்கு கூடுதல் பொறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது,
நகைகளை வாங்கும்போது, எடை மற்றும் நிறம், தங்க விலை நிர்ணயம், காரட் விகிதம் மற்றும் தங்க எடையை அடிப்படையாகக் கொண்டது. ஆன்லைனில் தங்க நகையை வாங்குவதற்கு முன்ந்தாக நகைகளின் நிறம், டிசைன் மற்றும் எடையை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். நகை விலை நிர்ணயம், பொதுவாக எடை, வடிவமைப்பு மற்றும் கைவினைத்திறன் உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. நகைகளை தயாரிக்கும் நுட்பங்கள் அதன் ஆயுள் மற்றும் கூடுதல் ஆறுதலுக்கான நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்வதற்கான முக்கிய காரணியாகும், அதுதான் தங்க நகையின் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுக்கு காரணம்.
இயந்திரத்தால் தயாரிக்கப்படும் நகைகளைவிட, கையால் உருவாக்கப்படும் ஆபரணங்களின் விலை அதிகமாக இருக்கும். ஆன்லைனில் நகைகளை வாங்குவதற்கு முன், காரட் விகிதம், கிராம் எடை, வடிவமைப்பு மற்றும் கைவினைத்திறன் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் விலை எவ்வாறு வேறுபடுகிறது என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்.
நகைகளில் பயன்படுத்தப்படும் பூச்சு, டிசைன் ஆகியவை ஷாப்பிங் இணையதளத்தில் வெளியிடப்பட்ட படங்களுடன் பொருந்தவில்லை என்பதுதான் ஆன்லைனில் வாடிக்கையாளர்களின் புகாராக இருக்கிறது. நகைகளை வாங்குவதற்கு முன்னதாக ஒரு பிராண்டின் அங்கீகாரத்தை அறிய தொடர்பு விவரங்கள் மற்றும் எஸ்எஸ்எல் சான்றிதழ்களைச் சரிபார்க்கவும். ஆன்லைன் ஸ்டோரின் நம்பகத்தன்மையை ஒரு நுகர்வோர் எவ்வாறு தீர்மானிப்பார் என்பதில் எஸ்எஸ்எல் சான்றிதழ் பங்கு வகிக்கிறது.