பிரிட்டனின் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்ட இ-சிகரெட்டுகள் பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
பிரிட்டனில் மொத்தமாக சுமார் 2.4 மில்லியன் மக்கள் இ-சிகரெட் என்றழைக்கப்படும் மின்சுருட்டி புகைத்து வருகிறார்கள். இது Vaping என்றழைக்கப்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட வகை இ-சிகரெட்டுகள் ஐ பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இதனால் மில்லியன் கணக்கான மக்கள் இத்தடையை சந்திக்க உள்ளனர். மேலும் இத்தொழிலை நம்பி சுமார் 2,000 நிறுவனங்கள் 2 பில்லியன் டாலர் மதிப்பில் இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களுக்கு இந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் Vaping ஐ தடை செய்தால் புகையிலை மற்றும் சிகரெட் வர்த்தகம் காப்பாற்றப்படும்.
இதனால் மக்கள் மீண்டும் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகி, இதயம் மற்றும் நுரையீரல் நோய்கள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். சாதனங்களின் கூடுதல் அம்சங்கள் மற்றும் திரவ பொருட்களை கட்டுப்படுத்தும் இ-சிகரெட்டை உபயோகப்படுத்துவது Open-Vaping என்று கூறப்படுகிறது.
இதனால் கடும் பாதிப்பு ஏற்படும் என்று கருதியதால் உலக சுகாதார அமைப்பு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. மேலும் பிரிட்டனில் வசிக்கும் மக்களில் இ-சிகரெட்டை உபயோகிக்கும் 3.2 மில்லியன் மக்களில் 2.4 மில்லியன் மக்கள் Open-Vaping சாதனத்தை உபயோகிக்கின்றனர். மேலும் உலகெங்கும் இருக்கும் அரசாங்கத்திற்கும் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வருட இறுதியில் Glass-glowல் நடைபெற உள்ள மாநாட்டிலும் இது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பிரிட்டனின் பொது சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளதாவது, புகையிலை பிடிப்பதைவிட 97% பாதுகாப்பானது Vaping. மேலும் புகையிலையில் இருந்து விடுபட முயற்சிக்கும் நபர்கள் மின்-சிகரெட்டுகளை உபயோகிக்க ஆதரிப்பதாக தெரிவிக்கின்றனர்.