நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை சமந்தா நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து பின்னர் அந்த திருமண வாழ்க்கையில் மனக்கசப்பு ஏற்பட்டு கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்த பதிவில் வெண்ணிலா கிஷோர் மற்றும் ராகுல் ரவீந்திராவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு” நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன்.” என உருக்கமாக கேட்டிருந்தார் . இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.