மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்து அங்கிருந்து தொடர்ந்து கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி வரும் சம்பவங்கள் நீடித்து வருவதாக நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இதனை கண்டித்து தக்கலை வட்டாச்சியர் அலுவலகம் எதிரே நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். அப்போது பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி இளைஞர் நிர்வாகி 2014ஆம் வருடம் ஆத்தூரில் காங்கிரஸ் கட்சியினர், நாதக மேடையை அடித்து நொறுக்கியது போல, இப்போதும் அடித்து நொறுக்க வேண்டும் என முயற்சி செய்தால் நாங்கள் காத்துக் கொண்டுதான் இருக்கிறோம் வாருங்கள்.
அப்போது காங்கிரசில் இருந்த பல இளைஞர்கள் தற்போது நாம் தமிழர் கட்சியில் இருக்கிறோம். நாம் தமிளர் மேடையை யாராவது இந்த மண்ணில் அடித்து நொறுக்கினால் நாங்களும்தயாராகத் தான் இருப்போம். குமரியில் கனிமவளங்கள் கடத்தப்படுவதை காங்கிரஸ் இத்தனை ஆண்டு காலம் ஆகியும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. பாஜகவின் முதலாளியாக உள்ள அதானியின் துறைமுகத்துக்கு கனிம வளங்களை கடத்துவதற்கு நாம் தமிழர் கட்சி மட்டும்தான் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஆனால் எங்களை காங்கிரஸ் எதிர்த்து போராடி வருகிறது. இந்த மண்ணின் மலைகளை உடைத்து நொறுக்கினால், இங்கே நாங்கள் சம்பவம் பண்ணுவோம் என்று பேசியுள்ளார்.