ஐ.நா. சபை எங்களுக்கு உதவ வேண்டும் என சிரியா கோரிக்கை விடுத்துள்ளது.
சிரியா நாட்டிற்கு ஐ.நா தூதர் கீர் பெடர்சன் சென்றுள்ளார். இதனையடுத்து அவரை அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரி பைசல் மேத்நாத் நேரில் சந்தித்து வரவேற்றார். மேலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது வெளியுறவு துறை மந்திரி பைசல் மேக்தாத் கூறியதாவது. அமெரிக்க ராணுவம் சட்ட விரோதமாக சிரியாவில் முகாமிட்டுள்ளது. இதனை தடுப்பதற்கு ஐ.நா. சபை உதவி செய்ய வேண்டும். மேலும் 2014-ஆம் ஆண்டு போரினால் பாதிக்கப்பட்ட தங்கள் நாட்டிற்குள் நுழைந்ததிலிருந்து அமெரிக்கா படைகள் சிரியாவில் பல ராணுவ தளங்களை நிறுவியுள்ளது. இந்நிலையில் நாங்கள் அமெரிக்க படைகளை எங்கள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு பலமுறை சிரியா வலியுறுத்தியுள்ளது. ஆனால் சிரியாவின் இறையாண்மையை அமெரிக்க ராணுவம் மீறுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.