Categories
மாநில செய்திகள்

நீங்கள் எத்தனை பேருக்கு வேலை கொடுத்து இருக்கீங்க…. சொல்லுங்க பார்க்கும்…. சரமாரியாக கேள்வி எழுப்பிய ஓபிஎஸ்….!!!!

ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023-ஆம் ஆண்டிற்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. அந்த அட்டவணை காலி பணியிடங்களுக்கு ஏற்ப அமையவில்லை. இதனால் தற்போதுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப அந்த அட்டவணையை மாற்ற அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தேன். ஆனால்  தமிழக அரசு பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை  பாக்கு விலை 10  பைசா என்ற பழமொழியை போல் அரசு துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற  வாக்குறுதி குறித்து கேள்வி கேட்டால் தனியார் நிறுவனங்களில் முகாம்கள் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என கூறியுள்ளனர்.

இந்நிலையில் அரசைப்  பொறுத்தவரையில்  காலியாக உள்ள இடங்களை நிரப்புவது தான்  முதல் கடமை. ஆனால் தனியார் நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும்  மேற்பட்டோருக்கு  வேலை வாய்ப்பு வழங்கப்படாதாக கூறுவது அரசின் திறமையின்மையை காட்டுகிறது. எனவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எத்தனை அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது என்பது குறித்தும், பொறுப்பேற்ற பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எத்தனை காலி பணியிடங்கள் பல்வேறு அரசு முகாம்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளது என்பது  குறித்தும் அறிக்கை வெளியிட வேண்டும்” என அவர் அந்த அறிக்கைகள் கூறியுள்ளார்.

Categories

Tech |