Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நீங்கள் எப்படி செய்யலாம்?…. மோதி கொண்ட இரு தரப்புகள்….. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

காவல்துறையினர் கண் முன்னே இருதரப்பினர் மோதி கொண்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேவூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு வருகின்ற 3-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் கோவில் எங்களுக்கு என உரிமை கொண்டாடி வந்துள்ளனர்.இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு தரப்பினர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு  கருடன் கொடி கம்பம் நடும் நிகழ்ச்சி செய்துள்ளனர்.

இதனை பார்த்த மற்றொரு தரப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது திடீரென இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் திட்டக்குடி தாலுக்கா அலுவலகத்தில் சமாதானம் கூட்டம் நடத்திய பிறகு கருடன் கொடி கம்பம் நட வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |