பிரபல பாலிவுட் நடிகையான சுஷ்மிதா சென்னை காதலிப்பதாக தொழில் அதிபரும் ஐபிஎல் நிறுவனமான லலித் மோடி புகைப்படங்களுடன் ட்வீட் செய்துள்ளார். சுஷ்மிதாவுடன் மாலத்தீவுகளுக்கு சென்ற போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த ட்வீட்ல் அவர் மென்ஷன் செய்திருந்தது சுஷ்மிதா சென்னின் டிவிட்டர் ஹேண்டில் இல்லை. அதற்கு மாறாக போலி ஹேண்டில் இதனை பார்த்த சமூக வலைதளவாசிகள் லலித் மோடியை கிண்டல் செய்து வருகின்றனர்.
அவர்கள் கூறியிருப்பதாவது சுஷ்மிதா சென்னின் ட்வீட்டர் ஹேண்டில் எது என கூட தெரியவில்லை நீங்கள் எல்லாம் அவரை காதலிக்கிறீர்களா.? ஒருவேளை லிலீத் மோடியை சுஷ்மிதா பிளாக் செய்திருப்பார். அதனால் தான் போலி ஹேண்டில் மென்சன் செய்துள்ளார். ஏதோ கல்லூரி பையனுக்கு முதன்முறையாக காதல் வந்தது போல் அல்லவா இந்த லலித் மோடி நடந்து கொள்கின்றார் என தெரிவித்திருக்கின்றனர். இந்த சூழலில் லலித் மோடி பெரிய பணக்காரர் என்பதால் 56 வயதினரை சுஷ்மிதா காதலிக்கிறார் என சமூக வலைத்தளவாசிகள் விலாசி வருகின்றனர். அதற்கு அவரிடம் இல்லாத பணமா தேவையில்லாமல் பேசாதீர்கள் என சுஷ்மிதாவின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.