Categories
சினிமா தமிழ் சினிமா ஹாலிவுட் சினிமா

“நீங்கள் ஒரு ராக் ஸ்டார் அல்லு அர்ஜுன்!”…… புஷ்பா படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல ஹாலிவுட் நடிகர் பாராட்டு….!!!

அண்மையில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தை பாராட்டி பிரபல ஹாலிவுட் நடிகர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் சென்ற டிசம்பர் மாதத்தில் வெளிவந்த திரைப்படம் புஷ்பா ஆகும். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்தது. இத்திரைப்படம் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளிவந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு வெளியான இந்தத்திரைப்படம் மற்ற திரைப்படங்களைவிட அதிக வசூலை  பெற்றது. தற்பொழுது பிரபல ஹாலிவுட் நடிகர் அனுபம் கேர் இத்திரைப்படத்தை பார்த்து பாராட்டுக்களை இணையதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் அனுபம் கேர் கூறியுள்ளதாவது, “புஷ்ப திரைப்படத்தை பார்த்தேன். உண்மையான பிளாக்பஸ்டர் திரைப்படமாகும். நல்ல திரைப்படம் மற்றும் உற்சாகம் நிறைந்தவை. நீங்கள் ஒரு ராக் ஸ்டார் அல்லு அர்ஜுன். உங்களின் நடிப்பை மிகவும் ரசித்தேன். உங்களுடன் படத்தில் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஜெய் ஹோ..!” என்று பதிவிட்டுள்ளார். அனுபம் கேர் “எம்எஸ் தோனி, அக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்” உள்ளிட்ட நிறைய படங்களிலும் தமிழிலில் “லிட்டில் ஜான், விஐபி” போன்ற படங்களில்  நடித்துள்ளார் என்பது குறிப்பிட வேண்டியவை.

Categories

Tech |