திமுக தலைமையிலான தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு எதிர்கட்சிகள் சார்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து மாநில முழுவதும் அனைத்து இந்திய அதிமுக சார்பில் இன்று போராட்டங்கள் நடைபெறும் என்று அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் செங்கல்பட்டு பழைய நிலையத்தில் திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் பொம்மையை முதலமைச்சராக ஸ்டாலின் இருந்து வருகிறார். இப்போது தமிழ்நாட்டிற்கு நான்கு முதலமைச்சர் இருகின்றனர். திமுக அரசின் குடும்ப ஆட்சி காரணமாக மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படவில்லை. கமிஷன், கலெக்ஷன், கரெக்ஷன் ஆகியவைதான் இந்த ஆட்சியில் இருந்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது.
அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மக்களை நீண்ட நாள் கோரிக்கையான செங்கல்பட்டு தலைமை இடமாகக் கொண்டு மாவட்டத்தை உருவாக்கியது அதிமுக தான். பாலாற்றில் பல ஆண்டுகளுக்கு கழித்து அதிமுக அரசுதான் தடுப்பணைகள் கட்டியிருந்தது. ஒரு புதிய மாவட்ட உருவாக்க வேண்டும் என்றால் சுமார் 200 கோடி அளவிற்கு செலவாகும். இருப்பினும் வளர்ச்சிக்காக மக்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு அதிமுக மாவட்ட ஆட்சியரகம் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளராகம் ஆகிய பணிகள் 90% முடித்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம் கொலவாய் ஏரி ரூ.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைப் போலவே மதுராந்தம் ஏரிக்கு ரூ.120 கோடி மதிப்பீட்டில் தூர் வாருவதற்கு அரசாணை அதிமுக அரசு வெளியிடப்பட்டது. தமிழக முழுதும் குடிம்ராமத்து பணியில் 6000 எரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. இதனையடுத்து ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த உடன் முதல் போனஸ் ஆக சொத்து வரி உயர்த்தப்பட்டது. இப்போது மக்களுக்கு இரண்டாவது போனஸ் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதுதான் மின்கட்டண உயர்வு. இதனைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டது. ஆனால் ஆன்லைன் ரம்மி வியாபாரிகள் இது குறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அப்போது ஆட்சி அமைந்தது, ஆன்லைன் ரம்மி தடை செய்ய வேண்டும் என்பதற்கு முறையான ஆவணங்கள் மற்றும் காரணங்களை முன் வைக்காத காரணத்தினாலே ஆன்லைன் ரம்மி தடையை நீதிமன்றம் ரத்து செய்தது என்று குற்றம் சாட்டினார். இதனையடுத்து அதிமுகவிற்கு எதிராக அறிவிக்க அறிவிக்கப்பட்டிருந்த பண்ருட்டி ராமச்சந்திரனை எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்தார். அதாவது, அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவையே விமர்சித்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அதன் பிறகு பாட்டாளி மக்கள் கட்சிக்குச் சென்று சட்டமன்ற உறுப்பினராகி யானையின் மீது சென்றார். பின்னர் தேமுகவிற்கு சென்றார். உங்களது அறிவுரை எங்களுக்கு தேவையில்லை, தயவு செய்து குறை கூறாமல் இருங்கள். இல்லை என்றால் சென்று விடுங்கள். நீங்கள் கட்சியின் கிளை செயலாளராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர் என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.