பிரபல நாட்டில் சபாநாயகரின் கணவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் சபாநாயகரான நான்சி பெலோசி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தைவானுக்கு பயணம் செய்தார். இதனால் அவர் சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானார். இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி நான்சி பெலோசியின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரது கணவர் பால் பெலோசியை சுத்தியலால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இந்நிலையில் 82 வயதான அவருக்கு தலையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் சபாநாயகரின் வீட்டில் நுழைந்து மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.