சீனா அறிமுகப்படுத்தும் பொருளாதார தடைக்கு பிரிட்டன் வீட்டு வசதி அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டன் அரசு சில நாட்களுக்கு முன்பு சீனா மனித உரிமை மீறியதாகக் கூறி அந்நாட்டிற்கான பொருளாதாரத்திற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சிங்ஜியாங் பிரச்சனைகளை பற்றி தவறான கருத்துக்களை பரப்பி வந்த பிரிட்டனை சேர்ந்த ஒன்பது நபர்கள் மீதும், அங்குள்ள நான்கு நிறுவனத்தின் மீதும் பொருளாதார தடையை விதிக்க இருப்பதாக சீன அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த பிரிட்டன் வீட்டு வசதி அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் “தங்கள் நாட்டை சேர்ந்த நபர்களின் மீது பொருளாதார தடையை விதிப்பது சரியில்லை, இது முற்றிலும் தவறு” என்று கூறி சீன அரசை கண்டித்துள்ளார்.