பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்டோபர் 9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அத்துடன் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதையடுத்து அசல் கோளாறு வெளியேறினார். அதன்பின் சென்ற வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். இவற்றில் தற்போது 17 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 30வது நாட்களை நெருங்கி இருக்கிறது. இந்நிலையில் இன்று வெளியான 2வது புரோமோவில் அமுதவாணன், “நீங்கள் ஒன்று சொன்னால் அதனை ஜாலியாக எடுக்கிறீர்கள். அதே நாங்கள் சொன்னால் மட்டும் அதை தவறாக நினைக்கிறீங்கள். எல்லாத்துக்கும் பிரச்சனை செய்யணும் என்று பண்றீங்க. நேத்து ஒரு விஷயம் நடந்தது.
அதனை கேட்டு சொல்ல சொல்றீங்க. அது தான் எனக்கு வேலையா. உங்களுக்கு தேவை எனில் நீங்கள் கேளுங்கள். நான் எப்படி அடுத்தவரின் தனிப்பட்ட விஷயத்தை கேட்கமுடியும்” என விக்ரமனை பார்த்து அமுதவாணன் கூறுகிறார். இத்துடன் அந்த புரோமோ முடிவடைகிறது. தற்போது இந்த புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.