நேற்று பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்றைக்கு இருக்கின்ற எதிர்க்கட்சி, எதிர்க்கட்சியின் தலைவர் தினந்தோறும் வசை பாடி கொண்டிருக்கிறார். திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள் என்று சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை. அவர்கள் ஆட்சியில் ஜீரோ. உழுகின்ற நேரத்தில் ஊர் சுற்றிவிட்டு, அறுவடை நேரத்தில் அரிவாளை தூக்கி கொண்டு போன கதையாக திமுக கதை இருக்கு. திமுக தமிழகத்தில் ஆண்ட போதும், மத்தியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 16 ஆண்டுகாலம் இருந்த போதும் என்ன செய்தார்கள் ? எதுவுமே செய்யல.
காவேரி நடுவர் நீதிமன்ற தீர்ப்புக்கு அரசாணையை பெற்று தந்தீங்களா ? இல்லை. காவிரி நடுவர் மன்றத்தினுடைய தீர்ப்பு கிடைக்கப் பெற்று ஏழு ஆண்டுகள் கழித்து மாண்புமிகு அம்மா தான் உச்சநீதிமன்றம் சென்று, காவிரி நடுவர் மன்றத்தினுடைய இறுதி தீர்ப்பு பெற்றுத் தந்தார்கள் அதுதான் வரலாறு. அப்பொழுது நீங்கள் ஊர் சுத்திக்கொண்டு இருந்தீர்கள். இப்போது அருவாளை தூக்கிட்டு போனால் மக்கள் எப்படி உங்களை நம்புவார்கள்.
அதற்குப் பின்னாலே அந்த அரசாணையை சட்டபூர்வமாக அமுலுக்கு வரவேண்டும் என்று சொன்னால், காவிரி நதிநீர் ஆணையம் நிறுவப்பட வேண்டும். காவிரி நீர் முறைப்படுத்தும் குழுமம் உருவாக்கப்பட வேண்டும். அதன் குறித்தும் மாண்புமிகு அம்மா அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் கொடுத்தார்கள்.
அந்த வழக்கை முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு துரிதப்படுத்தி காவேரியினுடைய , நடுவர் மன்றத்திற்கு அதிகாரம் அளிக்கின்ற வகையில் காவிரி நீர் முறைப்படுத்தும் ஆணையத்தையும் இன்றைக்கு பெற்று தந்திருக்கிறார்கள், இதுதானே வரலாறு.
நீங்கள் ஆட்சியில் 16ஆண்டுகாலம் மத்தியிலும், மாநிலத்திலும் இருந்தீர்கள். 24மணி நேரத்தில் காவேரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு அரசாணை பெற்று தர முடியும், உங்களால் முடியவில்லை. அதேபோல தென் மாவட்ட மக்களுடைய ஜீவாதார உரிமை முல்லை பெரியார் பிரச்சனைக்கும் உங்களால் தீர்வை பெற்று தர முடியவில்லை.
அதையும் அம்மா அவர்கள் உச்சநீதிமன்றம் சென்று அரசாணை பெற்று தந்தார்கள். காவிரி டெல்ட்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததும் நம்முடைய முதலமைச்சர் தான், அம்மாவுடைய அரசு தான். நீங்கள் ஆட்சியில் இருந்து ஊர் சுத்திக்கொண்டு இருந்தீர்கள் என் திமுகவை துணை முதல்வர் ஓ.பி.எஸ் சாடினார்.