Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நீங்கள் ஜொலிப்பதை பார்ப்பதில் ரொம்ப பெருமையாக உணர்கிறேன்”….. இன்ஸ்டாவில் போட்டோவை பகிர்ந்து புகழ்ந்த ஆர்யா மனைவி சாயிஷா….!!!!

ஆர்யாவை புகழ்ந்து அவரின் மனைவி நடிகை சாயிஷா இன்ஸ்டாவில் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஆரியா அறிந்தும் அறியாமலும், நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, ஆரம்பம், டெடி, சார்பட்டா பரம்பரை முதலான அதிக திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் கஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாயிஷாவுடன் காதல் ஏற்பட்டது. இவர்கள் கடந்த 2019ஆம் வருடம் மார்ச் மாதத்தில் இரு வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். ஆர்யா சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக அருமையாக அவரின் நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நிலையில் அவரின் மனைவி சாயிஷா அவரை புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து சாயிசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்யாவை கணவராக பெற்றதில் பெருமை கொள்வதாக கூறியுள்ளார். மேலும் ஆர்யாவை கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, உங்களுக்கு மனைவியாக இருந்து நீங்கள் ஜொலிப்பதை பார்ப்பதில் ரொம்ப பெருமைப்படுவதாக கூறியிருக்கின்றார். மேலும் அதில் நேற்றிரவு நடைபெற்ற விழாவில் ஆர்யாவுக்கு சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது கிடைத்ததையும் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |