Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டீர்களா…? – தடுப்பூசி போட்டுக்கொண்ட நகுல் கேள்வி…!!!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே வழி ஆகும். ஆனால் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு மக்களிடையே தயக்கமும், அச்சமும் இருந்து வருகிறது. எனவே தடுப்பூசி குறித்து தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கையூட்டும் விதமாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் சினிமா பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்கின்றனர்.

அந்தவகையில் பாய்ஸ், மாசிலாமணி, வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் நகுல் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர், “நீங்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டீர்களா? என்று கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் அனைவரையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |