சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட பிரன்டியர்ஸ் மருத்துவ இதழில் கொரோனா தொடர்பான முக்கிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
பாஸ்டர் – யூஎஸ்பியை சேர்ந்த அறிவியலாளர்கள் கொரோனா தொடர்பான புதிய ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்கள்.
அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதை அனைத்து நாடுகளும் வழக்கமாக வைத்துள்ளது.
இந்நிலையில் தனிமை காலம் முடிந்த பிறகும் அவர்களால் 70 நாட்கள் வரை கொரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த நபர்களில் கொரோனா 70 நாட்கள் வரை செயல் இழக்காமல் இருப்பதாகவும், அதனால் அனைவருக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.