Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நீங்கள் தலையிட வேண்டாம்” மருமகன் திட்டியதால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மருமகன் திட்டியதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாப்பிள்ளைகவுண்டன் புதூர் பகுதியில் விவசாயியான தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவர் சத்யபிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியரின் 6 வயதுடைய மகன் வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது டிவி பார்ப்பதால் சரியாக படிப்பதில்லை எனக்கூறி தமிழ்ச்செல்வன் சிறுவனை திட்டியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் சத்திய பிரியாவின் தாயார் மரகதம் என்பவர் கணவன் மனைவி இருவரையும் சமரசம் செய்வதற்கு முயன்றுள்ளார்.

அப்போது தமிழ்ச்செல்வன் எங்களது குடும்ப விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என தனது மாமியாரிடம் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மரகதம் தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த மரகதத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மரகதம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தமிழ் செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |