Categories
மாநில செய்திகள்

“நீங்கள் தான் எங்களுக்கு வழி காட்ட வேண்டும்”…… நெகிழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்…!!!!!

திமுக சார்பில் விருதுநகரில் முப்பெரும் விழா நடைபெற்றது. அப்போது கட்சிக்காக உழைத்தவர்களை சிறப்பிக்கக்கூடிய வகையில் சிலருக்கு திமுக சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். அதன்படி முப்பெரும் விழாவில் சம்பூர்ணம் சுவாமிநாதனுக்கு பெரியார் விருதும், கோவை இரா மோகனுக்கு அண்ணா விருதும், புதுச்சேரி சி.பி. திருநாவுக்கரசுக்கு பாவேந்தர் விருதும், குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் விருதும் வழங்கப்பட்டது. அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், கழக அடையாளமாய் கருப்பு சிவப்பு பார்டர் வைத்து வேஷ்டி தயாரித்தவர் அம்மையார் சம்பூர்ணம் சாமிநாதன். இவரை போல 10 சம்பூர்ணம் இருந்தால் தமிழ்நாட்டை யாராலும் அசைக்க முடியாது. அவருக்கு பெரியார் விருது அளிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

அதனை தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் திமுகவை சிங்கம் போல வழிநடத்தியவர் டி.ஆர்.பாலு. இவர் தமிழகத்தின் தலைநகர் மட்டுமமில்லை இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் திமுக குரலை ஓங்கி ஒழிப்பவர். அவருக்கு கலைஞர் விருது வழங்குவது சரியான தேர்வு தான். நான் இளைஞர் அணி செயலராக இருந்தபோது என்னை அழைத்து வந்த விருதுநகர் மாவட்டத்தில் கிராம கிராமமாக அழைத்துச் சென்று கழக கொடி ஏற்ற வைத்த பெருமை குன்னூர் சீனிவாசனுக்கு உண்டு. ரத்தம், வியர்வை, உழைப்பே கொடுத்து இந்த இயக்கத்தை நீங்கள் உருவாக்கி உள்ளீர்கள். உங்கள் துண்டுகளுக்கான பாராட்டு அல்ல இது, எங்களின் நன்றியை காட்டுவதற்காக விழா. நீங்கள் தான் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |