Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்கள் மக்கள் இல்லையா ? வானத்துல இருந்து குதிச்சி வந்தீங்களா ? எல்லாருக்கும் அல்வா கொடுக்குறாரு….!!

எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு அல்வா தான் கொடுக்கின்றார் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

விக்கிரவாண்டியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் நேற்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, திமுக பிரசாரத்தில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டதால் மக்கள் சொல்வது பல்லாயிரம் கோடி திட்டங்களுக்கான கோரிக்கைகள் . அல்ல. அவர் எல்லாமே அவங்களோட அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பிரச்சனைகள். அதை தீர்க்கத்தான் கோரிக்கை வைக்கிறாங்க. அதை கூட பழனிச்சாமி அரசாங்கம் நிறைவேற்றல.

பல்லாயிரக்கணக்கான மக்கள் என்னிடம் கோரிக்கை மனுக்களை கொடுக்கிறதை பார்த்து மிரண்டு போன பழனிச்சாமி அவர்கள்,குறை தீர்க்கும் வேளாண்மை திட்டம் கொண்டு வரப் போவதாகவும், அதுக்கு போன் செஞ்சா போதும் அப்படின்னு சொல்லி இருக்காரு. அதனால ஸ்டாலினுக்கு இனி வேலை இல்லன்னு சொல்லிருக்காரு. கடந்த நான்கு ஆண்டு காலமா பழனிச்சாமிக்கு இந்த புத்தி வரல. இந்த ஸ்டாலின் சொன்ன பிறகு தான்,

ஆட்சி முடிய போகிற நேரத்தில் தான் புத்தி வருகிறதா ? நான் கேட்கிறேன், யார் முதலமைச்சர் பழனிச்சாமியா ? ஸ்டாலினா ? யார் முதலமைச்சர் ? இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. அதுவும் புகாரை செல் போன் மூலமா சொல்லணுமா ? 2016ஆம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லுச்சு ?பல வாக்குறுதிகள் குடுத்தாங்க. அதுல முக்கியமான உறுதி மொழி அனைவருக்கும் செல் போன் தரப்படும் என்பது, செல்போன் கொடுத்தாங்களா ? இல்லை.

பழனிச்சாமி கொடுக்கல, அல்வா தான் குடுத்துட்டு இருக்கிறாரு. எல்லா மக்கள் குறையும் நான் தீர்த்து விட்டேன். ஸ்டாலினிடம் மக்கள் மனு  கொடுக்கல அப்படின்னும் பழனிச்சாமி சொல்லி இருக்கிறார். படிச்சி பார்த்தேன் பத்திரிக்கையில். மனு கொடுத்த நீங்கள் எல்லாம் மக்கள் இல்லையா ? வானத்துல இருந்து குதிச்சி வந்தீங்களா ? ஒரு முதலமைச்சர் பேசுகிற பேச்சா இது ? என முக.ஸ்டாலின் விமர்சித்தார்.

Categories

Tech |