Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்கள் மதத்தை பரப்புறீர்களா?… செம்பி படம் குறித்து கேள்வி…. சாரி சொன்ன இயக்குனர் பிரபு சாலமன்….!!!!

மைனா, கும்கி, கயல் ஆகிய வெற்றி திரைப்படங்களை கொடுத்த பிரபு சாலமன், இப்போது செம்பி எனும் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் அஸ்வின் குமார், கோவை சரளா, தம்பி ராமைய்யா என பல பேர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். செம்பி படம் இன்று(டிச..30) வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில் இப்படம் குறித்து  பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு இயக்குனர் பதிலளித்தார். அப்போது பிரபு சாலமனிடம் “செம்பி படம் முடியும் போது A film by Jesus என இயேசுவின் பெயர் வர காரணம் என்ன..?, நீங்கள் மதத்தை பரப்புறீர்களா..?” என கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து பிரபு சாலமன் கூறியதாவது “ஜூசஸ் மதத்தை பரப்பவந்தவர் அல்ல. நான் அதுபோன்ற எண்ணத்தில் இயேசுவின் பெயர் போடவில்லை. உங்களுக்கு தவறாக மற்றும் காயப்படுத்துவது போல் அமைந்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்” என கூறினார்.

Categories

Tech |