ரஷிய அதிபர் புதின் ஒரு பெண்ணை மிகவும் பாராட்டியுள்ளார்
உக்ரைன் மீது ரஷியா தொடந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்து தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஜரினா என்ற பெண் உக்ரைனில் போர் நடக்கும் இடத்துக்கு சென்று செய்தி சேகரித்ததுடன், ரஷிய படை வீரர்களுக்கு 47 மில்லியன் பவுண்டுகளை வழங்கி உதவியுள்ளார். அப்போது அவரது காலில் திடீரென வெடிகுண்டு சிதறல்கள் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து ரஷிய அதிபர் புதின் கிரெம்ளின் மாளிகையில் ஜரினாவுக்கு வீரப்பதக்கம் அளித்து பாராட்டியுள்ளார். பின்னர் அவர் கூறியதாவது. “நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். ஆனால் தைரியமாக போர் நடக்கும் இடத்திற்கு வந்ததும் உங்களை பார்த்து நான் திகைத்துப்போய் விட்டேன்” என கூறியுள்ளார்.