Categories
டெக்னாலஜி பல்சுவை

நீங்கள் வாட்ஸ்அப் பயனரா… உங்களுக்கான புதிய அப்டேட் இதோ..!!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக பார்ப்பது எப்படி என்பதை இதில் பார்ப்போம்.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் நாம் ரகசியமாக பார்க்க முடியும். அதற்கு நாம் மற்ற சேவைகளை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. வாட்ஸ் அப்பில் அதற்கான சிறப்பு அம்சம் உள்ளது. வாட்ஸப்பில் நமக்கு தெரியாமல் இருக்கும் சில அம்சங்களை நாம் முறையாகப் பயன்படுத்துவதில்லை. அதனை பயன்படுத்தினால் பெரிதான பயன்பாடு இருக்கும். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போடுவதே பலர் வழக்கமாக வைத்திருப்பர்.

சிலர் வாட்ஸ்அப் ஸ்டேடஸ் போடாவிட்டாலும் மற்றவர்கள் போட்டதை பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் யார் யார் பார்த்துள்ளனர் என்பது காண்பிக்கப்படும். ஸ்டேடஸை நாம் ரகசியமாக பார்க்க முடியும். அதற்கு மற்ற செயல்களை பயன்படுத்த வேண்டாம். வாட்ஸ் அப்பில் அதற்கான சிறப்பு அம்சம் உள்ளது. அதை செய்தால் மற்றவர்கள் நம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்ப்பது அவர்களுக்கே தெரியாமல் இருக்கும்.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை ரகசியமாக பார்ப்பது எப்படி?

வாட்ஸ்அப்பில் உள்ள வலது மூலையில் மேலே உள்ள இருக்கும் 3 புள்ளிகளை கிளிக் செய்யவும். அதில் செட்டிங்ஸ் (settings) உள்நுழைந்து அக்கவுன்ட் (account) என்பதை தேர்வு செய்து Privacy-ல் இருக்கும் Read Reciepts என்ற முறை ஆப் செய்யவும்.

Settings–>Account–>Privacy–>Read Reciepts – Disable இதனால் நீங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்ப்பது மற்றவர்களுக்கு தெரியாது. மேலும் இந்த முறையினால் ஒருவருக்கு நீங்கள் சாட் செய்யும் போது மெசேஜ் சென்றுவிட்டால் 2 டிக் மார்க் வரும்.

அதை அவர்கள் படித்துவிட்டால் அந்த டிக் மார்க் நீல நிறமாக மாறிவிடும். Read Receipt முறை நீங்கள் ஆப் செய்துவிட்டால் மெசேஜ் நீங்கள் படித்தாலும் அனுப்பியவர்களுக்கு நீல நிற டிக் மார்க் காட்டாது. உங்களாலும் அவர்கள் படித்து விட்டார்களா என்பதை தெரிந்து கொள்ளும் நீல நிற டிக் மார்க் வராமல் இருக்கும். உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் மீண்டும் நீங்கள் இந்த முறையை மாற்றி வைத்து கொண்டால் பழைய நிலைக்கு மாறிவிடும்.

Categories

Tech |