வீட்டில் இருந்தப்படியே நிறைய பணம் சம்பாதிக்க நீங்கள் விரும்பினால், உங்களுக்கான வாய்ப்பை இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி ஏற்படுத்தி தருகிறது. இதன்மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்தின் மூலம் ஒரு ஏஜென்ட்டாக பணிபுரிய விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் வீட்டில் இருந்தபடியே தினமும் ஆயிரக்கணக்கான ரூபாயை எளிதாக சம்பாதிக்க முடியும்.
இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நாட்டில் சுமார் 55 சதவீத மக்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை பதிவு செய்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், ஐ.ஆர்.சி.டி.சியின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு ஏஜென்ட்டாக (ticket booking agent) மாறுவதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்டலாம். அதாவது டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்தால் ஏஜென்ட்துக்கு நல்ல கமிஷன் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க முடியும். அதேநேரத்தில் இந்த விஷயங்களைப் பற்றி நீங்கள் நன்றாகத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
ஒரு முகவராக, நீங்கள் ஏசி அல்லாத ஸ்லிப்பர் கோச் சாதாரண டிக்கெட்டை முன்பதிவு செய்கிறீர்கள் என்றால், ஐ.ஆர்.சி.டி.சி. தரப்பில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ரூ .20 கமிஷனும், ஏ.சி வகுப்பு டிக்கெட்டை முன்பதிவு செய்தால் டிக்கெட்டுக்கு ரூ .40 வரையும் கிடைக்கும். இதில் சிறந்த அம்சம் என்னவென்றால், டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஏஜென்ட்டுக்கு வரம்பு எதுவும் இல்லை. அவர் விரும்பினால், அவர் ஒரு மாதத்தில் எத்தனை டிக்கெட் வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம்.
டிக்கெட்டை முன்பதிவு செய்வதோடு, அதற்கான கமிசனும் கிடைக்கும். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு எந்த வரம்பும் இருக்காது. மேலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகளை ஆன்லைன் கணக்கு மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் அவர்களுக்கு கிடைக்கும். அதன்மூலம் அவர்களுக்கு கமிஷன் கிடைக்கும். இதற்காக நீங்கள் ஆன்லைன் படிவத்தை நிரப்ப வேண்டும். அதன் பிறகு நீங்கள் ஸ்கேன் செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் அறிவிப்பு படிவத்தை ஐ.ஆர்.சி.டி.சிக்கு அனுப்ப வேண்டும். இதற்குப் பிறகு ஐ.ஆர்.சி.டி.சி உங்கள் ஆவணங்களை சரிபார்க்கும். இதற்கு, உங்களுக்கு பான் கார்டு, ஆதார் அட்டை, மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி, புகைப்படம், முகவரி போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.