Categories
Tech டெக்னாலஜி

நீங்கள் GMAIL-ஐ பயன்படுத்துகிறீர்களா…..? அப்ப கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்ததால் உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் நம்முடைய கைக்குள் இருக்கும் செல்போன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அதோடு கடல் கடந்து இருக்கும் நம்முடைய சொந்தங்களிடமும் தகவல்களை பரிமாற்றிக் கொள்வது செல்போன் மூலம் எளிதாகி விட்டது. அந்த வகையில் பலர் தங்களுடைய அலுவலக தேவைக்கும், முக்கியமான செய்திகளை அனுப்பவும் ஜிமெயில் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்த வேலைகளை செய்வதற்கு தற்போது வாட்ஸ் அப்பை கூட பயன்படுத்தலாம். இந்நிலையில் அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் ஜிமெயில் செயலி என்பது ஆட்டோமேட்டிக்காக இருக்கும்.

இந்த ஜிமெயில் செயலியை whatsapp போன்று எளிதாக டெலிட் செய்து விட முடியாது. இதனால் ஜிமெயில் செயலியை எப்படி டெலிட் செய்யலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு ஜிமெயில் செயலிக்குள் முதலில் செல்ல வேண்டும். அதில் உள்ள உங்கள் தரவுகளை பேக்கப் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் செயலியை டெலிட் செய்து விட்டால் உங்களுடைய தரவுகளை மீண்டும் எடுக்க முடியாது. எனவே உங்களுடைய தரவுகளை முன்கூட்டியே பேக்கப் செய்து கொள்ள வேண்டும்.

இதனையடுத்து செட்டிங் பகுதிக்குள் சென்று கூகுள் என்ற பகுதியை தேர்வு செய்து manage your Google account என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து மேல் பக்கத்தில் உள்ள Data and privacy என்பதை தேர்வு செய்து விட்டு கீழ்புறமாக ஸ்க்ரோல் செய்து கொண்டே சென்றால் download or delete your data என்ற ஆப்ஷன் இருக்கும். அதற்குள் சென்று விட்டு delete Google service என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

அதன்பின் ஜிமெயில் பாஸ்வேர்டை கொடுத்து sign in செய்ய வேண்டும். அதன் பிறகு கூகுள் மூலம் கிடைக்கும் அனைத்து சேவைகளும் திரையில் காட்டும். அதில் ஜிமெயில் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அருகில் உள்ள டெலிட் பாக்ஸை கிளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து புதிதாக பயன் படுத்தக்கூடிய ஈமெயில் ஐடியை அதில் வெரிஃபை செய்ய வேண்டும். அப்போது தான் நீங்கள் டெலிட் செய்ய நினைக்கும் ஐடி டெலிட் ஆகும்.

Categories

Tech |