மும்பையை சேர்ந்த கவிதா என்பவரது கணவர் கமல் காந்த். சில நாட்களுக்கு முன்பு கணவரை பிரிந்த இவர், மீண்டும் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அவருடன் இணைந்து வாழ்ந்துள்ளார். ஆனால் அவரின் காதலின் நினைவுகள் இவரை துரத்தியதால், கணவருக்கும் மாமியாருக்கும் slow poison ஐ சாப்பாட்டில் கலந்து கொடுத்துள்ளார். இதன் காரணமாக இவரது மாமியார் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
தற்போது கணவரும் வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே கவிதாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அவரே தனது மாமியருக்கும் கணவருக்கும் விஷம் வைத்து கொன்றது தெரிய வந்துள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை தற்போது கைது செய்துள்ளனர்.