தூக்கக் கோளாறு
டீ உள்ள காஃபின் அதிகமாக எடுத்துக் கொண்டால் லேசான டையூரிடிக் விளைவுக்கு வழிவகுக்கின்றது. இது தூக்கக் கோளாறுகளையும் ஏற்படுத்திவிடும்.
மலச்சிக்கல்
தேநீரில் தியோபிலின் என்ற ஒரு வேதிப்பொருள் இருக்கிறது. அது செரிமானத்தின் போது நீரிழப்பை ஏற்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது. காலையில் தேநீர் உட்கொள்வது மலம் எளிதில் வருவதுக்கு என்று பலர் நம்புகிறார்கள், அதே நேரத்தில் அதிக அளவு தேநீர் குடிப்பது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
கருச்சிதைவுக்கான சாத்தியம்
கர்ப்பிணி பெண்கள் தேநீரை முழுவதுமாக தவிர்க்க வேண்டும், ஏனெனில் அதன் காஃபின் உள்ளடக்கம் கருவின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் கருச்சிதைவு அச்சுறுத்தலை ஏற்படுத்திடும்.
கவலை மற்றும் அமைதியின்மை
Caffeine மனநிலையை மேன்படுத்த அதிகரிக்கும் மருந்துகளில் ஒன்றாகும், மேலும் இது நம் உடலில் சில நல்ல மற்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. தேநீர் அதிகமாக உட்கொள்வது தூக்கக் கோளாறு, அமைதியின்மை, பதட்டம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கின்றது. முக்கிய ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும். அதிகமாக உட்கொள்வது இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடலால் உறிஞ்சுவதைத் தடுக்கக்கூடும்.” சில ஆய்வுகள் கருப்பு தேயிலை (Blackw டீ ) இரும்பு உறிஞ்சுதலைக் குறைக்கும் என்று காட்டுகின்றது.