Categories
தேசிய செய்திகள்

நீங்க ஆதார் எடுத்து 10 வருஷம் ஆகிடுச்சா?…. அப்போ உடனே வேலையை முடிங்க…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சென்ற செய்வ்வாய்கிழமை அன்று ஆதார் எண்களை வழங்கும் அரசு அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம், 10 வருடங்களுக்கு முன்பான ஆதார்அட்டை வைத்திருப்பவர்கள் இன்னும் சில அப்டேட்டுகளை செய்யாமல் வைத்திருக்கின்றனர் எனவும் அதை கூடியவிரைவில் செய்து முடிக்குமாறும் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த அப்டேட்டில் அடையாள மற்றும் வசிப்பிட ஆதார ஆவணங்களையும் சேர்த்து அப்டேட் செய்ய வேண்டும். இது போன்ற அப்டேட்டுகளை ஆன்லைன் மூலமாகவும் செய்துகொள்ளலாம் என யுஐடிஏஐ தெரிவித்து இருக்கிறது. அறிக்கையின் அடிப்படையில் 10 வருடங்களுக்கு முன் தங்களின் ஆதார் அடையாள அட்டையை பெற்றவர்கள் மற்றும் அந்த அடையாள அட்டையை பெற்றதில் இருந்து அதனை அப்டேட் செய்யாதவர்கள் உடனே அப்டேட் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இவ்வாறு ஆவணங்களை அப்டேட் செய்வது அவசியமான ஒன்றுதானா என்பது தொடர்பாக கூறவில்லை. அடையாள ஆவணம் மற்றும் வசிப்பிடச்சான்று போன்றவற்றை அப்டேட் செய்ய கட்டணம் செலுத்தவேண்டியது அவசியம் ஆகும். இதை செய்ய ஆதார் போர்ட்டல் (அல்லது) அருகில் உள்ள ஆதார் மையத்தில் செய்துகொள்ளலாம் எனவும் யுஐடிஏஐ தெரிவித்து உள்ளது. அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்திக்கொள்ளவும், அடையாளம் காணுதல் (அல்லது) சான்றிதழ் வழங்குவதில் ஏதேனும் சிக்கல்களைத் தடுப்பதற்கும் மக்கள் தங்களது ஆதார் தகவல்களைப் அப்டேட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த ஆதார் அடையாளங்களுக்கு உங்களது கரு விழி, கைரேகை மற்றும் புகைப்படங்கள் முக்கியமாகும். ஆதார் எண் (அல்லது) பதிவுச்சீட்டு இல்லாதவர்கள் அரசின் மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெறமுடியாது என சென்ற ஆகஸ்ட் மாதம் யுஐடிஏஐ அறிவித்து இருந்தது.

Categories

Tech |